திஸ்பூர்/அசாம்: சாலையோர உணவு கடைகள் பக்கம் மக்கள் செல்வது அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. மலிவான விலையில் உணவு கிடைப்பதும், அதற்கு ஓர் காரணமாகவும் இருக்கலாம்.
குறிப்பாக, பானிபூரி பிரியர்கள் என தனிக்கூட்டமே உண்டு. சாலையோரம் இருக்கும் கடைகளில் பெரும் அளவில் கூட்டத்தை காண முடிகிறது.
ஆனால், அசாமில் அத்தகைய பானிபூரி கடையில் சிறுநீரை கலந்து விற்கும் காணொலி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் கெளஹாத்தியில் உள்ள பானிபுரி கடை ஒன்றில், அங்கிருக்கும் நபர் வேலை செய்துகொண்டே சிறிய கப்பில் சிறுநீர் கழித்து அதை பானிபூரிக்கு உபயோகிக்கும் நீரில் கலக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவ்விவகாரம் விஷ்வருபம் எடுத்திட, கடையின் உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் சாலையோர கடைகளை நாடும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரம் இன்றி மிக அசுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உடலுறவுக்கு பிறகு ஹேப்பியா தூங்குவது ஆண்களா, பெண்களா?