உத்தர பிரதேசம்: ஆக்ராவின் டவுகி பகுதியில் உள்ள குய் குமார்ஹர் கிராமத்தில் உள்ள கின்னு பழத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது தெருநாய்கள் கடித்ததில் ஒரு சிறுமி உயிரிழந்தார், மற்றொரு சிறுமி காயமடைந்தார். ஆறு நாய்கள் கூட்டமாக சிறுமிகளை கடித்து தோட்டத்திலிருந்து வெளியே இழுத்துச் சென்றன. நாய்களில் பயங்கர தாக்குதலில் சிறுமிகள் அலறித்துடித்தனர். இந்த கொடூர தாக்குதலில் ஒரு சிறுமி உயிர் இழந்தார், காயமடைந்த சிறுமி ஆக்ராவில் உள்ள எஸ்என் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குய் குமார்ஹர் கிராமத்தில் வசிக்கும் சுக்ரீவா என்பவரின் ஐந்து வயது மகள் காஞ்சன், இவரது உறவினர் ரஷ்மியுடன் வீட்டின் பின்புறமுள்ள கின்னு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது 6 நாய்கள் அப்பாவி சிறுமிகள் இருவரையும் தாக்கியதாக காஞ்சனின் மாமா டோரி லால் தெரிவித்தார். கொடூரமான நாய்கள் காஞ்சன் மற்றும் ரஷ்மியை அருகில் உள்ள பண்ணைக்கு இழுத்து சென்றன. நாய்கள் தாக்கியதையடுத்து காஞ்சன் அலறி துடித்தார்.
ஆனால், அவள் சம்பவ இடத்திலேயே இறந்தாள். அவரது உறவினரையும் நாய்கள் தாக்கின. அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்த பூரி என்பவர் வந்து காப்பாற்றினார். நாய்களை விரட்ட முயன்ற போது, அவரை தாக்கின. பூரி சிங் டிராக்டருடன் நாய்களை துரத்தினார். இதையடுத்து, நாய்கள் ஓடின.
தகவல் கிடைத்ததும் சிறுமிகளின் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். காஞ்சனின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். உறவினர்கள் ராஷ்மியை எஸ்என் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். நாய்கள் தாக்கியதில் பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறை துணை ஆணையர் சோமேந்திர மீனா தெரிவித்துள்ளார். இறந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் முன்வரவில்லை.
இதையும் படிங்க: வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்! சமூக வலைதளம் மூலம் ஆசைக்காட்டி ரூ.1 கோடி மோசடி!