டெல்லி: இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த மாதத்தில் மட்டும் 97 லட்சத்துக்கும் அதிகமான உள்நாட்டுப் பயணிகள் விமானங்களில் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 1.05 கோடியாக இருந்தது. அந்த வகையில் ஒரே மாதத்தில் 7.6 விழுக்காடு பயணிகள் எண்ணிக்கை சரிந்துள்ளது.
இந்த எண்ணிக்கையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஜூலை மாதத்தில் 57.11 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் 58.8 விழுக்காடாகும். இதற்கு அடுத்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் 10.13 லட்சம் பயணிகளையும், ஏர் இந்தியா 8.14 லட்சம் பயணிகளையும் கையாண்டுள்ளது.
அதேபோல கோ ஃபர்ஸ்ட் , ஸ்பைஸ்ஜெட், ஏர் ஏசியா, அலையன்ஸ் ஏர் ஆகியவை முறையே 7.95 லட்சம், 7.76 லட்சம், 4.42 லட்சம், 1.12 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ஜனவரி முதல் ஜூலை வரையில் 6.69 கோடி பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உள்நாட்டு விமான கட்டண உச்ச வரம்பு நீக்கம்... கட்டணம் குறையுமா..? அதிகரிக்குமா..?