இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரத்து 742 பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 13 லட்சத்து 71 ஆயிரத்து 901ஆக உள்ளது.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 43 ஆயிரத்து 138ஆக உள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இதுவரை 43 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரத்து 864 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ், இதுவரை, 45 கோடியே 37 லட்சத்து 70 ஆயிரத்து 580 தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 11 லட்சத்து 79 ஆயிரத்து 10 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
வீணான தடுப்பூசி உட்பட மொத்தமாக 42 கோடியே 8 லட்சத்து 32 ஆயிரத்து 21 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சுமார் 3 கோடியே 29 லட்சத்து 38 ஆயிரத்து 559 தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 1991 நெருக்கடியைவிட வரும் நாட்கள் கடுமையானதாக இருக்கும் - மன்மோகன் சிங்