ETV Bharat / bharat

ஹிமாச்சலில் திடீர் வெள்ளம்... 150-க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு... - flash flood in himachal pradesh

ஹிமாச்சல் பிரதேச மாநிலம் லாஹவுல்-ஸ்பிடியில் திடீர் வெள்ளம் காரணமாக 150-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். மீட்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

over-150-people-stuck-in-himachal-pradesh-lahaul-spiti-due-to-flash-flood

author img

By

Published : Aug 1, 2022, 12:28 PM IST

சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக சத்ரு மற்றும் டோர்னி மோர் பகுதியில் நேற்று (ஜூலை 31) திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் 150-க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டுள்ளனர்.

இதுகுறித்து லாஹவுல்-ஸ்பிடி போலீசாருக்கு நள்ளிரவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட போலீசார், மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் சம்பவயிடங்களுக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்கட்ட தகவலில், சத்ரு மற்றும் டோர்னி மோர் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கான சாலைகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிக்கான படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கீலாங் வட்டாட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் நேரில் கண்காணித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.