ETV Bharat / bharat

'வந்தே மாதரம்' - ஆப்கானிலிருந்து இந்தியா திரும்பிய பயணிகள் நெகிழ்ச்சி முழக்கம்

ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதர், அலுவலர்கள் உட்பட 120 பேருடன் காபூலில் இருந்து கிளம்பிய இந்தியா விமானப்படை விமானம் பாதுகாப்பாக இந்தியா வந்தடைந்தது.

India brings back its Ambassador, officials from Kabul
ஆப்கானிஸ்தான்: இந்தியத் தூதர், அதிகாரிகள் மீட்பு!
author img

By

Published : Aug 17, 2021, 8:00 PM IST

ஜாம்நகர்(குஜராத்): ஆப்கான் நாட்டை தாலிபன்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்தச்சூழ்நிலையில், காபூலில் சிக்கியிருந்த இந்தியத் தூதர், உயர் அலுவலர்களை மீட்க சி-17 என்ற இந்திய ராணுவ விமானம் காபூல் சென்றது.

அந்த விமானம், இந்தியத் தூதர், தூதரக ஊழியர்கள் உள்ளிட்ட 120 பேருடன் கிளம்பி இன்று காலை 11.15-க்கு குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள விமானத்தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

தரையிறங்கிய பின்னர் பேசிய ஆப்கானுக்கான இந்தியத் தூதர், கடினமான நிலையில், தங்களை பாதுகாப்பாக மீட்டுவந்த இந்திய விமானப் படைக்கு நன்றி எனத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பல பிராந்தியங்களில் இருந்த இந்தியர்கள் தற்போது காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். அதுபோக, குருத்துவாராவிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நாடு திரும்பிய இந்தியர்கள் வந்தே மாதரம் என நெகிழ்ச்சி முழக்கம்

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்வதற்காக, இந்திய வெளியுறவுத்துறை பிரத்யேக கண்காணிப்பு மையத்தை தொடங்கியுள்ளது.

ஆப்கானில் ஏற்பட்டும் வரும் நிலையை உன்னிப்பாக கவனித்துவருவதாகவும், அங்குள்ள இந்து, சீக்கிய சமூகங்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்ப விரும்புபவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் இந்தியா விமானப் படை விமானம் 45 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பிய மக்கள் கூட்டமாக சேர்ந்து 'வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்' என முழக்கமிட்டனர்.

இதையும் படிங்க: இ-எமர்ஜென்சி விசா: இந்தியர்களை மீட்க விரைவு நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.