ETV Bharat / bharat

காஷ்மீரில் 5 ஆண்டுகளில் 1,002 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 5 ஆண்டுகளில் 1,002 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்தார்.

காஷ்மீரில் 5 ஆண்டுகளில் 1,002 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 5 ஆண்டுகளில் 1,002 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
author img

By

Published : Feb 8, 2023, 3:26 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் இன்று (பிப்.8) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 1,002 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் நடவடிக்கைகளின்போது, 306 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மொத்தமாக 761 பயங்கரவாதி தாக்குதல்கள் நடந்துள்ளன. அதில் 626 தாக்குதல்கள் ஒரே ஆண்டில் நடந்தன. ஜம்மு காஷ்மீரில் 2022-23ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட கிராம பாதுகாப்பு குழுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மொத்தமாக 4,153ஆக உள்ளது.

வரும் நிதியாண்டுக்காக புதிய குழுக்கள் அமைக்கப்படவில்லை, ஏற்கனவே உள்ள குழுக்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 15 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுக்களில் உள்ளவர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர்.

இந்த குழுக்களை வழிநடத்தும் உறுப்பினர்களுக்கு மாதம் ரூ. 4,500 ஊதியமாக வழங்கப்படும். இதில் தன்னார்வ அடிப்படையில் உறுப்பினர்கள் சேர்க்கப்படுள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ 4,000 வழங்கப்படும். இவர்கள் தங்களது பாதுகாப்பின் கீழ் உள்ள பகுதிகளில் பயங்கரவாத நடமாட்ட கண்காணிப்பு, எதிர் நடவடிக்கை, துப்பு கொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவர் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதானி விவகாரத்தில் ஒற்றுமை.. குடியரசு தலைவர் தீர்மானத்தில் வேற்றுமை.. எதிர்க்கட்சிகள் பிளவு.?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.