ETV Bharat / bharat

இந்தியாவில் 100ஐ கடந்த ஒமைக்ரான் - தமிழ்நாட்டில் ஒமைக்ரான்

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 கடந்துள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Omicron cases in India, 100 Omicron cases in India, Omicron in tamilnadu
Omicron cases
author img

By

Published : Dec 17, 2021, 5:20 PM IST

டெல்லி: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியை கிளப்பியது. இந்த தொற்றுகளும் ஓய்ந்த நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் வெறும் 2 வாரத்தில் போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, ஜப்பான், இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட 91 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 கடந்துள்ளது.

டெல்லி, ஆந்திரா, சண்டிகர், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிமாக உள்ளது. குறிப்பாக மாகாராஷ்டிராவில் 32 பேருக்கு தொற்று உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஒன்பது பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அதில் ஒருவருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விரைவில் ஒமைக்ரான் பேரலை

இதனிடையே பிரிட்டனில் ஒமைக்ரான் காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், "விரைவில் ஒமைக்ரான் பேரலை ஏற்படக்கூடும். இதற்கு எதிராக போடப்பட்ட 2 டோஸ் கரோனா தடுப்பூசிகளும் பயன் அளிக்காது. மக்கள் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டால் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது.

எனவே மக்கள் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். பிரிட்டனில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள அடுத்த வாரத்தில் முகாம்கள் தொடங்கவிருக்கிறது. 2ஆவது டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் 3 மாத கால இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான்.. மக்கள் பீதி..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.