டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் உறுப்பினர் அப்துல் ரசாக் பீடியாக்கல் மீது தொடுக்கப்பட்டு உள்ள பணமோசடி வழக்கில், அமலாக்க இயக்குநரகம், தேசிய பாதுகாப்பு சர்ச்சையை எழுப்பி இருந்தது. அவரது ஜாமீன் மனு குறித்த விசாரணையில், 'அமலாக்கத்துறை, தனது எதிர்ப்பை, ஒவ்வொரு முறையும் அதை பேய்த்தனமாக காட்ட வேண்டிய அவசியமில்லை. நமது தேசம் மிகவும் வலிமையானது என்றும், நேரம் வரும்போது மக்களே பதில் சொல்வார்கள்' என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூலை 13ஆம் தேதி) தெரிவித்து உள்ளது.
பணமோசடி வழக்கில் PFI பிரமுகர் அப்துல் ரசாக் பீடியாக்கலின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு, 'மனுதாரருக்கு நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று ஜாமீன் நிபந்தனைகள் உள்ளதா? அவரை ஏன் ஒரு வருடமாக சிறையில் அடைத்து உள்ளீர்கள்' என்று கேள்வி எழுப்பி உள்ளது.
இந்த வழக்கு விசாரணையில், பாதுகாக்கப்பட்ட சாட்சிகள் இருப்பதாகவும், அவர் வெளியே இருந்தால், அவர்கள் விரோதமாக மாறும் வாய்ப்பு உள்ளது. சாட்சிகளில் சிலர் PFI அமைப்பு உடன் தொடர்புடையவர்கள் என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு தெரிவித்து உள்ளார். இவரிடமிருந்து ஒரு பாஸ்போர்ட் மீட்கப்பட்ட நிகழ்வில், இவர்களில் சிலர் நேபாள நாட்டின் வழியாக, தப்பிச்சென்று உள்ளதால், அவர்களை கண்காணிப்பது மிகவும் கடினம் என்றும், அவர்களுக்கு என்று பல்வேறு ரகசிய இடங்கள் இருப்பதாக, ராஜூ மேற்கோள் காட்டி உள்ளார்.
பணமோசடி வழக்கில், மற்ற அனைவரும் ஜாமீனில் வெளியில் இருக்கும் போது, அவரை ஏன் சிறையில் அடைக்க வேண்டும் என நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பி உள்ளது. அவர் வெளிநாட்டில் வசித்து வருவதால், பணத்தை வசூலித்து தடை செய்யப்பட்ட அமைப்பிடம் கொடுத்திருக்கலாம். அமைப்புடன் அவரை நேரடியாக இணைக்க எதுவும் இல்லை என்று, அமர்வு குறிப்பிட்டு உள்ளது.
ஜாமீன் கோரி, பீடியாக்கல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, தனது மனுதாரர், நீதிமன்றம், தேசிய பாதுகாப்பு முகமை அல்லது அமலாக்கத்துறையில் புகார் அளிப்பார் என்று தெரிவித்து உள்ளார். மனுதாரர், ஒரு வாரத்தில் இரண்டு முறை காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் செய்யலாம் என்று நீதிபதிகள் அமர்வு, மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவேவிடம் வலியுறுத்தி உள்ளது.
ராஜூ, இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால், பீடியாக்கல்லுக்கு ஜாமீன் வழங்குவதை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு கடுமையாக எதிர்த்தார். நீதிபதி போபண்ணா, ''தேசம், அது பலவீனமானது என்று நான் நினைக்கவில்லை.… நமது நாடு மிகவும் வலிமையானது; எந்த நிலையிலும் மக்கள் அதை அழிக்க முடியாது என்று நினைக்கிறேன். நேரம் வரும்போது மக்களே பதில் சொல்வார்கள்'' என்று நீதிபதி போபண்ணா குறிப்பிட்டு உள்ளார்.
''பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்வதற்கான தீர்ப்பாய நடவடிக்கைகளின் போது அந்த நடவடிக்கைகளில் தரவுகள் இருந்தன. அவர்களின் அமைப்பில் துணை ராணுவப் படையினர் அணிவகுப்பு நடத்துகிறார்கள், மக்களை அச்சுறுத்துகிறார்கள். இது மிக மிக ஆபத்தான அமைப்பு” என்று தனது வாதத்தில், ராஜூ வலியுறுத்தி உள்ளார்.
இந்த விவகாரத்தில் எத்தனை பாதுகாக்கப்பட்ட சாட்சிகள் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்பதைக் கண்டறிந்து, நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில், ஜூலை 17ஆம் தேதி தெரிவிக்குமாறு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம், நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. மத்திய அரசு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.