ETV Bharat / bharat

அதிமுக பொதுக்குழு தீர்மானம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு! - OPS appeals Supreme court

OPS appeals in Supreme Court: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ops-appeals-in-sc-against-mhc-order-refusing-to-ban-resolutions-passed-in-aiadmk-general-assembly
அதிமுக பொதுக்குழு தீர்மானம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மேல்முறையீடு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 7:57 PM IST

டெல்லி: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2022 ஜீலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது எனவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், தன்னை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதையும் படிங்க: “அதிமுக-பாஜக கூட்டணி முறிவால் திமுகவிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது” - கே.பி.முனுசாமி

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவிட்டதால், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் செல்லாது என உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தனது தரப்பு கருத்துகளைக் கேட்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுக - பாஜக கூட்டணி என்னாச்சு?.. மனம் திறந்த ஓபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.