டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தல், ஆகஸ்ட் 6ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 5ஆம் தேதி தொடங்கியது. இந்த வேட்பு மனு தாக்கல் இன்று (ஜூலை 19) முடிவடைகிறது. நாளை (ஜூலை 20) வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது.
இந்த நிலையில் மார்கரெட் ஆல்வா நாடாளுமன்றத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், விசிக எம்.பி திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும், அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில், ஜெகதீப் தன்கார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மார்கரெட் ஆல்வா கர்நாடக மாநிலம், மங்களூருவைச் சேர்ந்தவர். முன்னதாக குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர். 1974ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் முறையாக மாநிலங்களவைக்கு தேர்வானார். இதையடுத்து 1980, 1996, 1992 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மறுபிரேத பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி