ETV Bharat / bharat

Patna Opposition Meeting: பீகாரில் சங்கமித்த எதிர்க்கட்சி தலைவர்கள்.. சிம்லாவில் அடுத்த மீட்டிங்.. பாட்னாவில் நடந்தது என்ன? - மல்லிகார்ஜூனா கார்கே

எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இரண்டாவது கூட்டம் சிம்லாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Opposition parties vow to fight together in 2024; next meeting in Shimla
எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம்- எதிர்கட்சி தலைவர்கள் கூட்டாக பேட்டி
author img

By

Published : Jun 23, 2023, 5:57 PM IST

பாட்னா: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் பீகாரில் இன்று (ஜூன் 23) எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 6 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். அதன்படி, நிதீஷ் குமார்(பீகார்), மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு), மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் ), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), பகவந்த் சிங் மான் (பஞ்சாப்) ஆகிய முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சரத் பவார். லாலு பிரசாத், அகிலேஷ் யாதவ், உமர் அப்துல்லா உள்ளிட்ட முன்னாள் முதல்வர்களும் பங்கேற்று இருந்தனர். அதுமட்டுமல்லாது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இடதுசாரி கட்சிகள் சார்பில் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் உத்தவ்தாக்கரே, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, டி.ராஜா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

கூட்டம் நிறைவு: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் இல்லத்தில், 2 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த கூட்டத்தில், 16 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பத்திரிகையாளர்களை கூட்டாக சந்தித்த தலைவர்கள்: பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், பத்திரிகையாளர்களை அவர்கள் கூட்டாக சந்தித்தனர். அப்போது, "எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை, எதிர்கட்சிகள் ஒன்றுகூடி எதிர்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக, பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே: எதிர்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், ஜூலை மாதத்தில், ஹிமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை, எதிர்கட்சிகள் ஒன்றுகூடி, பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்பது எப்படி என்ற கோணத்தில், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக, மல்லிகார்ஜூனா கார்கே தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி: நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம், ஒற்றுமையாக போராடுவோம்; வரலாறு இங்கிருந்து தொடங்கி உள்ளது, வரலாறு மாற்றப்பட வேண்டும் என்று பா.ஜ.க.வும், வரலாறு காப்பாற்றப்பட வேண்டும் என்று நாங்கள், பீகாரில் இருந்து விரும்புகிறோம். இந்த பாசிச அரசுக்கு எதிராக பேசுவதே எங்கள் நோக்கம்'' விசாரணை அமைப்புகளை, பாஜக அரசு, தவறாக பயன்படுத்தி வருகிறது என மம்தா பானர்ஜி, குற்றம் சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி : நாட்டின் கட்டமைப்பை பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்து சிதைத்து வருகிறது. எதிர்கட்சிகளுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும், கருத்தியலுக்காக, இங்கு ஒன்று கூடி உள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: மதுரை மல்லிக்கு வந்த சோதனை: வரத்து அதிகரிப்பால் மலிவு விற்பனையில் உச்சம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.