ETV Bharat / bharat

எதிர்க்கட்சிகள் கூட்டம்: மம்தா பானர்ஜி, ஸ்டாலின் பங்கேற்பு... மிரட்டும் அரவிந்த் கெஜ்ரிவால்!

ஜூன் 23ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பாட்னா விரைந்தனர்.

Patna
Patna
author img

By

Published : Jun 22, 2023, 8:28 PM IST

ஐதராபாத் : பீகார் தலைநகர் பாட்னாவில் நாளை (ஜூன் 23) அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரு வரிசையில் கொண்டு வரும் பணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஈடுபட்டு உள்ளனர்.

டெல்லி, மேற்கு வங்கம், தமிநாடு, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்ளை சந்தித்து ஆலோசனை நடத்திய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், நாளை ஜூன் 23ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேம்நாத் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்ட்ரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக பாட்னா விரைந்த மேற்கு வங்க முதலமைச்சர் ம்மதா பானர்ஜிக்கு, முதலமைச்சர் நிதிஷ் குமார் வரவேற்றார். இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள மாட்டார் என கூறப்பட்டது. தலைநகர் டெல்லியில் நிர்வாக அதிகாரத்தை பிரிக்கும் தொடர்பான மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நாளை (ஜூன் .23) பாட்னாவில் நடக்கும் எதிர்க் கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிப்போம் என ஆம் ஆத்மி கூறியதாக தகவல் பரவியது.

  • #WATCH | Bihar CM Nitish Kumar meets West Bengal CM Mamata Banerjee at Patna Circuit House

    CM Mamata Banerjee is in Patna to attend the Opposition meeting scheduled to be held tomorrow pic.twitter.com/DRRZpCaDhh

    — ANI (@ANI) June 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேநேரம் அண்மையில் ராஜஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்தார். டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என அண்மையில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாடை அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்து உள்ளார்.

இருப்பினும், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், பாட்னா எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. பீகார் தலைநகர் பாட்னா விரைந்த அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பக்வந்த் மான் அங்குள்ள பாட்னா சாகிப் குருத்வாராவில் ஆராதனையில் கலந்து கொண்டனர்.

  • #WATCH | Bihar | Delhi CM Arvind Kejriwal & Punjab CM Bhagwant Mann arrive at Patna Sahib Gurudwara to offer prayers.

    They are in the city to attend the Joint Opposition meeting scheduled for tomorrow. pic.twitter.com/mBb1cPS9Ld

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வருவது என்பது சாதாரண காரியம் இல்லை என்று கூறப்படுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்தை முன்மொழியும் பட்சத்தில் அது சாத்தியப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாட்னா எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பீகார் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஸ்டாலின் பாட்னாவுக்கு புறப்பட்டார். எதிர்க் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் உள்பட இரண்டு கூட்டங்களில் கலந்து கொண்ட பிறகு, நாளை (ஜூன் 23) இரவு பாட்னாவில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பாட்னாவில் அனைத்து எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேடை அலங்காரம் உள்ளிட்ட பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : Artemis Accords : நிலவு ஆராய்ச்சியில் இஸ்ரோ - நாசா கூட்டணி? வெள்ளை மாளிகை சூசகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.