ETV Bharat / bharat

கோ பேக் அமித்ஷா.. புதுச்சேரியில் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு - கோ பேக் அமித்ஷா

புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோ பேக் அமித்ஷா
கோ பேக் அமித்ஷா
author img

By

Published : Apr 24, 2022, 2:21 PM IST

புதுச்சேரி: சென்னை ஆவடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு இன்று (ஏப்.24) காலை 10.10 மணிக்கு வந்தடைந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் காமராஜர் சாலையில் ஒன்று திரண்டனர்.

அப்போது அவர்கள் கோ பேக் அமித்ஷா என்ற பதாகை, கறுப்புக் கொடியுடன் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்த கறுப்புக் கொடியை காவல் துறையினர் பறிக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இது குறித்து புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், "மாநில அரசின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் மத்திய அரசின் உள்துறை அமைச்சரான அமித்ஷா புதுச்சேரியில் எந்த ஒரு திட்டத்தையும் புதிதாக தொடங்கி வைக்கவில்லை.

கோ பேக் அமித்ஷா

தற்போது புதிய பேருந்து நிலையம், அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். அதற்கு அடிக்கல் நாட்ட மட்டுமே அமித்ஷா புதுச்சேரிக்கு வருகிறார். எனவே அமித்ஷாவின் வருகையால் புதுச்சேரிக்கு எந்த ஒரு பயனும் இல்லை" என்றார். இதையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி புறப்பட்டார் அமித்ஷா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.