டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் படேல் நகரில் உள்ள சந்திரபானி சௌக்கில் கட்டுப்பாட்டை இழந்த லாரி 3 பைக்குகள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து படேல் போலீசார் தரப்பில், இந்த சம்பவம் பிற்பகல் 2 மணியளவில் நடந்துள்ளது. சந்திரபானி சௌக் வழியாக சென்றுகொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது லாரி ஓட்டுநர் எதிரில் சென்றுகொண்டிருந்த 3 பைக் ஓட்டுநர்களை எச்சரிக்க ஹார்ன் அடித்துள்ளார். இருப்பினும் பைக் ஓட்டுநர்கள் ஓரமாக செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
அதன்காரணமாக லாரி 3 பைக்குகள் மீது மோதியது. இதில் பைக்குகள் லாரிக்கு அடியில் சிக்கின. அதிலிருந்து 3 பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் உடல் நசுங்கி சம்பயிடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சக வாகனவோட்டிகள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டோம். 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல் நிலை சீராக உள்ளது. லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளோம். விசாரணை நடந்துவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பக்தர்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் 9 பேர் கவலைக்கிடம்