ETV Bharat / bharat

Omicron Alert: உத்தராகண்ட் மாநிலம் செல்பவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை கட்டாயம் - உத்தராகண்டில் கோவிட் பாதிப்பு

புதுவகை ஒமைக்ரான் தொற்று அச்சம் காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் வெளிமாநிலத்தவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Omricon Alert
Omricon Alert
author img

By

Published : Nov 29, 2021, 4:06 PM IST

Updated : Nov 29, 2021, 6:42 PM IST

உத்தராகண்ட் மாநிலத்திற்குள் புதிதாக வருபவர்களுக்கு அம்மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநிலத்திற்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயம் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதற்காக மாநிலத்தின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் அலுவலர்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை உத்தராகண்ட் சுகாதாரத்துறை இயக்குனர் திரிபாதி பகுகுனா வெளியிட்டுள்ளார்.

புதிய வகை உருமாறிய கோவிட்-19 தொற்றான 'ஒமைக்ரான்' பரவல் குறித்த அச்சம் காரணமாகவே இந்த அறிவிப்பை உத்தராகண்ட் வெளியிட்டுள்ளது. ஒருவேளை பரிசோதனையில் கோவிட்-19 தொற்று உறுதியானால் அந்நபர் 14 நாள்கள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட மாநிலத்தில் 176 பேர் கோவிட்-19 தொற்று சிகிச்சையில் உள்ளனர். மத்திய அரசும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் கோவிட்-19 பரிசோதனை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற விதிமுறையை தற்போது மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆதரவு திரட்டுகிறாரா கேப்டன் அமரீந்தர் சிங்? ஹரியானா முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு!

Last Updated : Nov 29, 2021, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.