ETV Bharat / bharat

மகா சிவராத்திரி நமக்குள் இருக்கும் இருளை அகற்றட்டும்: குடியரசுத் தலைவர் முர்மு - மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர்

மகா சிவராத்திரி நமக்குள் இருக்கும் இருளை அகற்றி, செழிப்பான வாழ்க்கைக்கு அழைத்து செல்லட்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

ஈஷா யோகாவில் முர்மு
ஈஷா யோகாவில் முர்மு
author img

By

Published : Feb 18, 2023, 10:11 PM IST

கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில், சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசுகையில், "ஆதியோகி வீற்றிருக்கும் இடத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதால் நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்.

நாம் சிவபெருமானை தந்தை என குறிப்பிடுகிறோம். அவர் பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் இருக்கிறார். இது இரு பாலையும் சமநிலைப்படுத்தும் லட்சியம் ஆகும். சிவபெருமான் பெயருக்கு ஏற்ப கருணை வடிவான தெய்வம். ஆனால் எண்ணற்ற புராணங்களில், அவர் அச்சுறுத்தும் தெய்வமாக சித்தரிக்கப்படுகிறார். சிவனின் மற்றொரு பெயர் ருத்ரா. அதனால் தான் ராமரும், ராவணனும் சிவனை வணங்கினர். நவீன அறிவியலும் சிவனின் சில ரகசியத்தை அவிழ்க்க துவங்கியது வியக்க வைக்கிறது.

நவீன காலத்தின் புகழ்பெற்ற ரிஷியான சத்குரு முன்னிலையில் நாம் உள்ளோம். அவர் நமது கடந்த கால ரிஷிகளின் போதனைகளை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். சூழலியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள உலகம், சண்டையில் கிழிந்து கிடக்கிறது. இணக்கமான சீரான வாழ்க்கை அனைவருக்கும் தேவை. இந்த சிவராத்திரி நமது மனதில் உள்ள இருளை அகற்றி, வளமான வாழ்க்கைக்கு அழைத்து செல்லட்டும்'' என கூறினார். இந்த நிழச்சியில் முர்மு உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உடனிருந்தார்.

இதையும் படிங்க: நேரலை: ஈஷாவில் "மகா சிவராத்திரி 2023" கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.