ETV Bharat / bharat

26 வயது மனைவியை விற்று ஸ்மார்ட்போன் வாங்கிய கணவன்

author img

By

Published : Oct 23, 2021, 5:29 PM IST

ராஜஸ்தானில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்பதற்காக 26 வயது மனைவியை விலைபேசி விற்ற கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Odisha teen sold wife
Odisha teen sold wife

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கும் 17 வயது சிறுவனுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து, இருவரும் ராஜஸ்தான் மாநிலம் பாரன் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.

இந்தச் சிறுவனுக்கும் பாரன் பகுதியைச் சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அந்த முதியவர் சிறுவனிடம், உனது மனைவி மீது எனக்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட சிறுவனும், தனது மனைவியை 1.8 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி விற்றுள்ளான். அந்தப் பணத்தில், ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கிக்கொண்டு, மிச்ச பணத்துடன் சொந்த ஊருக்கு சிறுவன் சென்றுள்ளான். உறவினர்கள் மனைவியை பற்றி விசாரிக்கையில் முதியவரிடம் மனைவியை விற்ற சம்பவம் தெரியவந்தது.

இதையடுத்து உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், அந்தப் பெண் மீட்கப்பட்டார். சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார் .

இதையும் படிங்க: இரவு முழுவதும் சார்ஜ் போட்டதால் மாணவருக்கு ஏற்பட்ட விபரீதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.