ETV Bharat / bharat

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் கைகோர்த்த சதியில் ஐந்தாவது குற்றவாளி கைது!

சட்டவிரோதமாக பல்வேறு பணப்பரிவர்த்தனைகளில் பாகிஸ்தான் உளவுத்துறையினருடன் கைகோர்த்துக் கொண்டு பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவருக்கு மங்களூர் ஆட்டோ குண்டு வெடிப்பிலும் தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் கைகோர்த்த சதியில் 5 வது குற்றவாளியை கைது செய்த சிறப்பு பணிக்குழு

author img

By

Published : Jun 12, 2023, 9:14 AM IST

புவனேஸ்வர்: ஒருமுறை பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் மூலம் சட்டவிரோதமாக பல்வேறு பணப்பரிவர்த்தனைகளில் பாகிஸ்தான் உளவுத்துறையினருடன் கைகோர்த்துக் கொண்டு பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வந்த ப்ரீத்தம் கர்-யை ஒடிசா ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் (special task force) ஜஜாபூர் புருங்காவில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

முறைகேடாக பரிமாற்றம் செய்யப்பட்ட OTP விவகாரத்தில் தேடப்பட்ட வந்த குற்றவாளிகளில் 5 வது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ப்ரீத்தம் கர் (31) மீது முன்னதாகவே பல்வேறு குற்றச்சம்பவங்கள் அடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தீவிரவாத செயலில் ஈடுபட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்சின் காவல்துறைக் கண்காணிப்பாளர் கூறுகையில், “கைது செய்யப்பட்ட ப்ரீத்தம் கர், பல்வேறு தீவிரவாத குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவர் முறைகேடாக பணபரிவர்த்தணைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் விசாரித்த போது, பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் ஐஎஸ்ஒ அமைப்பினருடன் நேரடி தொடர்பில் இருந்ததும் ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இவர் முன்னதாகவே போலி கணக்குகள் மூலம் பணமோசடியில் ஈடுபட்டு வந்ததும், பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Somalia Bomb Blast: சோமாலியாவில் விளையாட்டு மைதானத்தில் குண்டுவெடிப்பு: 27 சிறுவர்கள் மரணம்!

இதனைத்தொடர்ந்து, இவரின் சிம் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளை சோதனை செய்த போது, கடந்த ஆண்டு மங்களூர் ஆட்டோ குண்டுவெடிப்பில் இவரும் அந்த சம்பந்தப்பட்டு உள்ளார் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தீவிரப் படுத்தப்பட்ட நிலையில் இவரின் கணக்கில் இருந்து பல்வேறு முறை லட்ச கணக்கில் பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதும் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் சமீபத்தில் இவரது கணக்கிற்கு வெளிநாட்டிலிருந்து 1.5 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி இவரின் பெயரில் பல்வேறு கணக்குகள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது” என அவர் கூறினார். ப்ரீத்தம் கர் பயனாளர்களின் தகவல்களை முறைகேடாகத் திருடி பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் ஐஎஸ்ஒ அமைப்பின் சைபர் குற்றவாளிகளுக்கு விற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இவர் பயன்படுத்தி வந்த 113 நபர்கள் கொண்ட “All saving AC available” என்ற வாட்ஸ் அப் கணக்கை ரத்து செய்து இவர் கூட்டாளிகளின் பின்புலம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவரின் பல்வேறு போலிக் கணக்குகளை STF முடக்கியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக STF தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Indian Railway: ஒடிசா விபத்து எதிரொலி.. ரயில்வே சிக்னல் அறைகளில் இரட்டை பூட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.