ETV Bharat / bharat

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை - ஒமைக்ரான் தொற்று ஒடிசா

ஒமைக்ரான் தொற்று காரணமாக ஒடிசாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

odisha-imposes-restrictions
odisha-imposes-restrictions
author img

By

Published : Dec 24, 2021, 6:25 PM IST

புபனேஸ்வர்: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான், 100 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. இந்தியாவில் கடந்த வாரத்தில் 30 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் 350 பேருக்கு உறுதியாகி உள்ளது.

இதனால் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதையடுத்து, தொற்று அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில், ஒடிசாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாள்களில் மக்கள் கூட்டமாகக் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், கல்யாண மண்டபங்களில் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீனாவில் காலவரையற்ற ஊரடங்கு அமல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.