ஆந்திர பிரதேசம்: மூன்று நாள் அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இன்று (செப்.26) டெல்லி திரும்பினார்.
குலாப் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். அந்தவகையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனிடம் குலாப் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டேன். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என உறுதியளித்தேன். அனைவரது பாதுகாப்புக்காகவும் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
குலாப் புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைக்கு இடையே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கடற்படை புயலின் நகர்வை கண்காணித்து வருகிறது.
பேரிடர் மீட்புக் குழுவினர் ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவில் தயார் நிலையில் உள்ளனர். இரண்டு கடற்படை கப்பல்கள் நிவாரண பொருட்கள் மற்றும் மருத்துவ குழுக்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விமான படை விமானங்கள் ஐஎன்எஸ் தேகா, ஐஎன்எஸ் ராஜாளி ஆகியவையும் தயார் நிலையில் உள்ளன.
இதையும் படிங்க: டெல்லி திரும்பினார் மோடி; உற்சாக வரவேற்பு!