ETV Bharat / bharat

மலையாளம் மொழி பேசக்கூடாது - மன்னிப்பு கோரிய மருத்துவமனை நிர்வாகம்! - டெல்லி ஜிடி பந்த் அரசு மருத்துவனை

செவிலியர்கள் யாரும் மலையாளம் பேசக்கூடாது என டெல்லி ஜிடி பந்த் அரசு மருத்துவனை உத்தரவு பிறப்பித்திருந்தது. கடும் எதிர்ப்புகளை அடுத்து, தற்போது இந்த உத்தரவை திரும்பப்பெற்ற மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

Nursing Superintendent of GB Pant Hospital apologises, notice against use of Malayalam language, மருத்துவமனையில் மலையாளம் மொழி, மலையாளம் மொழி பிரச்னை, டெல்லி ஜிடி பந்த் அரசு மருத்துவனை, malayalam language issue in delhi hospital
மலையாளம் மொழி பேசக்கூடாது
author img

By

Published : Jun 9, 2021, 4:09 PM IST

டெல்லி: மலையாளம் மொழி பேசக்கூடாது என்ற உத்தரவிற்கு ஜிடி பந்த் அரசு மருத்துவமனை மன்னிப்புக் கோரியுள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தவறான கண்ணோட்டத்தில் மலையாள மொழி பேசக்கூடாது என்று தடை விதிக்கவில்லை. அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.

தவறாக புரிந்துகொள்ளப்பட்டதற்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு ஏற்படவில்லை. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்புக் கோருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தலைநகரில் இயங்கிவரும் அரசு மருத்துவமனையான ஜிடி பந்த், செவிலியர்கள் யாரும் மலையாளம் மொழி பேசக்கூடாது. இவ்வாறு பேசுவதால் மருத்துவமனையில் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது.

இதற்கு தேசிய அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, அரசு மருத்துவமனை நிர்வாகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.