ETV Bharat / bharat

'2ஆம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை' -  ஒன்றிய அமைச்சர் - ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர்

கரோனா இரண்டாம் அலையின்போது, நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை
ஆக்சிஜன் பற்றாக்குறை
author img

By

Published : Jul 20, 2021, 10:10 PM IST

கரோனா 2ஆவது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தது குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் கேள்வி எழுப்பினார். அவருக்கு ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார்.

அதில், "கரோனா இரண்டாம் அலையில், நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்பது மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையிலிருந்து தெரியவருகிறது.

முதல் அலையின்போது சராசரியாக 3,095 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில் 2ஆவது அலையில் ஒன்பதாயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. இருப்பினும், மாநிலங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை ஒன்றிய அரசு உடனடியாகப் பிரித்து வழங்கியது.

மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுடனும், ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் ஆகியோருடனும் அவ்வப்போது கலந்தாய்வு செய்து, மாநிலங்களின் தேவையை அறிந்துதான் ஆக்சிஜன் அளவு ஒதுக்கீடுசெய்யப்பட்டது

மாநில அரசு அறிக்கையைப் பார்க்கையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது" எனத் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பவார், "மாநில அரசுகள் அல்லது யூனியன் பிரதேசங்கள் கரோனா மரணத்தை மறைத்ததாக எந்த அறிக்கையும் இல்லை. இருப்பினும், இறப்புத் தரவுகளின் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டே சில மாநிலங்கள் அவற்றின் புள்ளிவிவரங்களைத் திருத்தியுள்ளன.

அத்தகைய மாநிலங்கள், தங்கள் இறப்பு எண்ணிக்கைத் தரவுகளை தேதிகள், மாவட்டங்களின் அடிப்படையில் சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இது வைரஸ் சீசனா? மனிதர்களைத் தாக்கும் புதிய 'நோரோ வைரஸ்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.