போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானின் பிணை மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆர்யன் கான், அவரது தோழர் அப்பாஸ் மெர்சன்ட் உள்பட மூன்று பேரின் பிணை மனுவையும் நிராகரித்துள்ளது.
பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், மும்பை அருகே சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்தில் கலந்துகொண்ட போது போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலர்களால் அக்.3ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஆர்யன் கானை போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், அக்டோபர் எட்டாம் தேதி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் ஆர்யன் கான் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து ஆர்யன் கான் தரப்பு பிணை கேட்டு சிறப்பு நீதிமன்றத்தை அனுகியது. இந்நிலையில், ஆர்யன் கானின் பிணை மனுவை சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, ஆர்யன் கான் தரப்பு மும்பை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைப்போம் - பிரதமர் மோடி