கரோனா பரவலுக்கு மத்தியில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 125 இடங்களை பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
அதைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (நவம்பர் 15) நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல, பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக தார்கிஷோர் பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அம்மாநில ஆளுநர் ஆட்சி அமைக்க நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி நாளை நிதிஷ்குமார் பிகார் முதலமைச்சராக ஏழாவது முறை பதவியேற்கிறார்.
இதையும் படிங்க: 160 டன் பயோ கழிவுகளை உருவாக்கிய பிகார் தேர்தல்