ETV Bharat / bharat

புனே-சதாரா 6 வழி சுரங்கப்பாதை விரைவில் திறக்கப்படும் - நிதின் கட்கரி - ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

மகாராஷ்டிராவின் காம்பட்கி மலைத்தொடரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 6 வழி சுரங்கப்பாதை விரைவில் திறக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி
author img

By

Published : Jan 29, 2022, 1:20 PM IST

டெல்லி: மும்பை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து காம்பட்கி மலைத்தொடர் வழியாக சதாரா மாவட்டம் வரையில் 80 கிமீ சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2018ஆம் ஆண்டு தொடங்கியது.

அதன்படி தலா மூன்று பாதைகள் கொண்ட இரட்டைச் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, துறை சார்ந்த அலுவலர்களுடன் நேற்று(ஜன.28) ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காம்பட்கி மலைத்தொடர் சுரங்கப்பாதை திட்டம், நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் முயற்சியாகும். புனே-சதாரா இடையே விரைவான போக்குவரத்திற்கும், சரக்கு வாகனங்களின் எரிபொருள் சேமிப்பிற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதால் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்" என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே மகாராஷ்டிராவில் மும்பை-புனே விரைவுச்சாலை சுரங்கப்பாதை, கட்ராஜ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவில் சரிவை சந்திக்கும் கரோனா- குறைந்து வரும் தொற்று எண்ணிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.