ஆல்வார்: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தனது 9 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக தகவலறிந்த போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து காவல்நிலைய பொறுப்பாளர் வீரேந்திரபால் விஷ்னோய் கூறுகையில்,"இந்த சம்பவம் தொடர்பாக சைல்டு லைன் எண்ணில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் தகவல் தெரிவிக்காமலேயே சிறுமியைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து நாங்கள் சிறுமியை மீட்டு, அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதித்தோம். பரிசோதனை முடிந்ததும் வாக்குமூலம் பெற்றோம். இந்த வழக்கில் மருத்துவர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இந்த சம்பவத்தால் தங்களது கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதால் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்" என்று கூறினார்.
இதையும் படிங்க:தனது ஐந்து குடும்பத்தாரை தீயிட்டுக் கொளுத்திய நபர் தானும் தற்கொலை..!