ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் கோர விபத்து.. 9 பேர் உயிரிழப்பு..

மகாராஷ்டிராவின் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவில் சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 19, 2023, 9:14 AM IST

Updated : Jan 19, 2023, 3:24 PM IST

மும்பை: மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் இன்று (ஜனவரி 19) அதிவேகமாக வந்த லாரி கார் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து ராய்காட்டில் உள்ள ரெபோலி கிராமத்தில் அதிகாலை 4.45 மணியளவில் நடந்துள்ளது. சக வாகனவோட்டிகள் அளித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசாரின் முதல்கட்ட தகவலில் உயிரிழந்த அனைவரும் உறவினர்கள் என்பதும் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள குஹாகருக்கு வேனில் சென்று கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராய்காட் காவல்துறை கண்காணிப்பாளர் சோம்நாத் கார்கே கூறுகையில், இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் மீது மோதியுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை விசாரணை நடத்திவருகிறோம். லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளோம். இந்த விபத்தில் ஒரு பெண் குழந்தை, 3 பெண்கள், 5 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். 4 வயது சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை வெறும் கண்துடைப்பு.! வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

Last Updated : Jan 19, 2023, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.