கர்நாடகா: துமகுரு மாவட்டம் ஷிரா தாலுகாவில் உள்ள பாலேனஹள்ளி கேட் அருகே, நேற்று நள்ளிரவு லாரி மற்றும் குரூசர் (Crusier) கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர். இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இவர்கள் தும்கூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கலெம்பெல்லா காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சுமார் 35,000 பாம்புகளை பிடித்தவர் பாம்பு கடித்து மரணம்