பத்கல் (உத்தர கன்னடா): கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் பத்கல் தாலுகாவில் உள்ள இருவரின் வீட்டில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் இன்று சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனையானது சாகரா சாலையில் உள்ள உமர் தெருவில் உள்ள இரண்டு வீடுகளில் நடைபெற்றது. அப்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக 18 பேர் மீது உபா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் ரியாஸ் மற்றும் இக்பால் ஆகிய இருவர் உத்தர கன்னடம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீது ஜெர்மனி பேக்கரி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு!