ETV Bharat / bharat

தாவுத் இப்ராகிம் கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை

மும்பையில் நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் கூட்டாளிகளுக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனையில் ஈடுபட்டது.

NIA conducts raid on several places in Mumbai associated with Dawood Ibrahim

author img

By

Published : May 9, 2022, 12:28 PM IST

மும்பை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், மும்பையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், நாக்பாடா, கோரேகான், போரிவலி, சாண்டாகுரூஸ், மும்ப்ரா, பெந்தி பஜார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், முக்கிய கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டதாக புலனாய்வு முகமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • National Investigation Agency (NIA) conducts raids at more than one dozen locations in Mumbai against Pakistan-based gangster Dawood Ibrahim's associates and a few hawala operators pic.twitter.com/mAUq4w8gul

    — ANI (@ANI) May 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த பிப்ரவரி மாதம், தாவுத் இப்ராகிம், அவரது டி கம்பெனி மீது பயங்கரவாத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்தது. அவருக்கு எதிராக ஆதரங்களை திரட்டிவருகிறது. இதன்தொடர்ச்சியாகவே, இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. 1993ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தாவூத்தை ஐக்கிய நாடுகள் சபை 2003ஆம் ஆண்டு உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டியவர்களின் ரூ.3.59 கோடி சொத்துகள் முடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.