ETV Bharat / bharat

யாசின் மாலிக் குற்றவாளி.. மே25 தண்டனை விவரங்கள் அறிவிப்பு! - யாசின் மாலிக்

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி, தண்டனை விவரங்கள் மே25ஆம் தேதி அறிவிக்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Yasin Malik
Yasin Malik
author img

By

Published : May 19, 2022, 1:56 PM IST

புதுடெல்லி: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் மீது குற்றச் சதி, நாட்டிற்கு எதிரான வன்முறை, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் மற்றும் காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லியில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் வியாழக்கிழமை (மே19) குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு எதிராக உபா (UAPA) உள்பட அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் தண்டனையின் அளவு குறித்த வாதங்கள் மே 25 அன்று அறிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் மாலிக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

விசாரணையின் நிறைவு நாளில், அவர் மீது சுமத்தப்பட்ட சட்டப் பிரிவு 16 (பயங்கரவாதச் சட்டம்), 17 (பயங்கரவாதச் செயலுக்கு நிதி திரட்டுதல்), 18 (பயங்கரவாதச் செயலுக்கான சதி) உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் எதிர்த்து வாதாடவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

யாசின் மாலிக்குக்கு எதிராக மேலும், 20 (பயங்கரவாத கும்பல் அல்லது அமைப்பின் உறுப்பினர்) உபா (UAPA) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120-பி (குற்றச் சதி) மற்றும் 124-A (தேசத் துரோகம்) உள்ளிட்ட வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான யாசின் மாலிக், ஷபீர் ஷா, மசரத் ஆலம், முன்னாள் எம்எல்ஏ ரஷீத் பொறியாளர், தொழிலதிபர் ஜாகூர் அகமது ஷா வதாலி, பிட்டா கராத்தே, அஃப்தாப் அகமது ஷா, அவதார் அகமது ஷா, நயீம் கான், பஷீர் அகமது பட், பீர் சைபுல்லா உள்ளிட்ட பலர் மீதும் குற்றஞ்சாட்டு உள்ளது.

யாசின் மாலிக் மீதான தண்டனை விபரங்கள் மே25ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. யாசின் மாலிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கும் உள்ளது.

இதையும் படிங்க: யாசின் மாலிக் மீது குற்றப்பத்திரிகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.