ETV Bharat / bharat

பிரக்யான் ரோவரின் அடுத்த நடவடிக்கை என்ன? விக்ரம் லேண்டர் என்னாகும்! முழுத் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 7:23 AM IST

Updated : Aug 24, 2023, 12:02 PM IST

Chandrayaan 3 Rover Next Steps in Moon : சந்திரயான் 3 விணகலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், அதன் அடுத்த கட்டமாக லேண்டரில் உள்ள ரோவர் தரையிறக்கப்பட்டு ஆய்வு பணிகளை மேற்கொள்வதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Chandrayaan 3
Chandrayaan 3

ஐதராபாத் : சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நிலையில், அதில் இருந்த பிரக்யான் ரோவரும் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை யாரும் சென்றிராத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை 14ஆம் தேதி இந்திய விண்ணில் செலுத்தியது. பூமி மற்றும் நிலவின் சுற்றுப்பாதைக்குள் பல்வேறு கட்ட அடுக்குகளில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.

இதன் மூலம் சர்வதேச அளவில், நிலவில் அமைதியான முறையில் விண்கலத்தை தரையிறக்கிய 4வது என்கிற பெருமையையும், தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற வரலாற்று சிறப்பையும் இந்தியா பெற்றது. படிப்படிப்பாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட நிகழ்வை தென் ஆப்ரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி, இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்தார்.

நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் முதலில் அங்கு ஏற்பட்ட புழுதி காற்றில் நிலை குழையாமல் இருக்க சற்று அமைதியான நிலையில் இருக்கும். தொடர்ந்து 10 மீட்டர் உயரத்தில் இருந்து விக்ரம் லேண்டர் கீழே போடப்பட்டதால் நிலவில் இருந்து எழும் புழுதி அடங்கும் வரை விக்ரம் லேண்டர் எந்த பணிகளையும் மேற்கொள்ளது.

புழுதி முழுவதும் அடங்கிய பிறகு, விக்ரன் லேண்டரில் வயிற்று பகுதியில் மெல்ல திறக்கப்பட்டு அதன் வயிற்று பகுதியில் உள்ள ரோவர் எனப்படும் ஊர்தி கலன் மெல்ல வெளியெடுக்கப்படும். லேண்டரில் உள்ள சாய்வு தளம் அதன் வழியே ரோவரை சறுக்கிக் கொண்டு வெளியே கொண்டு வரும்.

அதை தொடர்ந்து நிலவின் நிலப் பரப்பு மற்றும் அதில் கலந்து உள்ள ரசாயன கலப்புகள் குறித்து புகைப்படம் எடுத்து ரோவர் அனுப்பும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நிலவின் மேல்பரப்பில் படிந்து உள்ள தூசுகள், பாறைகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ரோவர் அடுத்தடுத்த தரவுகளை பூமிக்கு அனுப்பும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Veeramuthuvel: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் படித்த கல்லூரியில் மாணவர்கள் கொண்டாட்டம்!

Last Updated : Aug 24, 2023, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.