ETV Bharat / bharat

ஹர்தீப் சிங் கொலை சம்பவம் : கனடாவுக்கு அமெரிக்க உதவி! ரகசிய ஏஜெண்டுகளை வழங்கியதாக தகவல்!

US spy agencies provided intelligence to Canada: காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவிற்குத் தொடர்பு இருப்பதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் கனடாவிற்கு தெரிவித்ததாக மேற்கத்திய நட்பு நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்து உள்ளது என தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

new-york-times-report-on-us-intelligence-agencies-information-to-canada-on-nijjar-killing
ஹர்தீப் சிங் கொலை குறித்து தகவல்களை கனடாவிற்கு அமெரிக்க உளவுத்துறை வழங்கியதா?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 2:25 PM IST

நியூயார்க்: காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவிற்குத் தொடர்பு இருப்பதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் கனடாவிற்கு தெரிவித்ததாக மேற்கத்திய நட்பு நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்து உள்ளது என தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜீன் 18ஆம் தேதி அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு சீக்கிய கோவிலுக்கு வெளியே காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் இந்த கொலையில் இந்தியாவிற்குத் தொடர்பு இருப்பதாகக் கனடாவிற்குத் தகவல் தெரிவித்து உதவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பெயர் குறிப்பிடப்படாத இரண்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றன.

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார். இந்தியா மீதான குற்றச்சாட்டு பைவ் ஐஸ் உளவுத்துறையால் பகிரப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹனின் அறிக்கையின் படி இது ஒரே கருத்தாக உள்ளன. பைவ் ஐஸ் உளவுத்துறையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன இந்த அமைப்பு 1946ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஹர்தீப் சிங் கொலை! "இந்தியா - கனடா இணைந்து செயல்பட வேண்டும்" - அமெரிக்கா கோரிக்கை!

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தொடர்பு குறித்த முழுமையான தகவல் அமெரிக்காவிடம் இல்லை. அவர்களுக்குத் தகவல் தெரிவித்து இருந்தால் உடனடியாக அமெரிக்கா உளவுத்துறை கனடா உளவுத்துறைக்குத் தகவல் தெரிவித்து இருக்கும் என்றும் மேலும் கனடா அரசு ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை எச்சரித்ததாகவும் ஆனால் இந்தியாவின் தலையீடு இருப்பதாகத் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றன.

அமெரிக்கா உளவுத்துறை தகவல்தொடர்புகள் மூலம் பகிரப்படும் தகவல்களைத் தனது நெருங்கிய நாடுகளின் உளவுத்துறைகளிடம் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்களைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றன.

அமெரிக்க அதிகாரிகள் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவைக் கனடா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் சமநிலையாக இருக்க விரும்புகின்றன. மேலும் நேற்று (செப்.23) அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறும் போதும், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் இந்த சம்பவம் குறித்து கனடா-இந்தியா இணைந்து செயல்படுவது முக்கியமானது எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய கனடா விவகாரம் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.