புதுச்சேரிக்குட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு கொண்டாட்டத்திற்கும், மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் அனுமதியில்லை என்ற உச்சநீதிமன்ற ஆணைப்படி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
வருகிற அனைத்து பண்டிகை நாட்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும், மேலும் இது தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதனை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தனது செய்திக் குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.