டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், “பிரதமர் மேம்பாட்டு முயற்சி” என்ற புதிய திட்டத்தை தொடங்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(பிப்.1) நிதிநிலை அறிக்கை தாக்கலில் முன்மொழிந்துள்ளார்.
இதுகுறித்து அவர், “இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள கிராமங்கள் வளர்ச்சியை மேம்படுத்த புதிய மூன்னேற்ற கிராம திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும். சுகாதாரம் , உள்கட்டமைப்பில் 112 மாவட்டங்கள் 95 விழுக்காடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன.
மேலும், ஏழு என்ஜின்கள் தொடர்பான தேசிய உள்கட்டமைப்பு பைப்லைனில் உள்ள திட்டங்கள், பிரதமர் கதி சக்தி கட்டமைப்புடன் இணைக்கப்படும். அனைத்து தபால் நிலையங்களும் வங்கிகளுடன் இணைக்கப்படும். இதன் மூலம் தபால் நிலையங்களில் ஏடிஎம், ஆன்லைன் பரிவர்த்தணை செய்யப்படும். இது ஊரக பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Budget 2022: காவிரி - பெண்ணாறு இணைப்பு திட்டம் அறிவிப்பு