ETV Bharat / bharat

Omicron Outbreak: பள்ளி, கல்லூரிகளை மூட முதலமைச்சர் உத்தரவு

author img

By

Published : Dec 28, 2021, 3:51 PM IST

ஒமைக்ரான் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகளை மூட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

New Restrictions In Delhi due to omicron

டெல்லி: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

ஒமைக்ரான் தொற்று வெறும் இரண்டு வாரத்தில் 100 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. இந்தியாவில் கடந்த வாரத்தில் 80 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் 650 பேருக்கு உறுதியாகி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் கடுமையாக்கி வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் கூடுதலாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு

  • தனியார் அலுவலகங்கள் 50 விழுக்காடு ஊழியர்களுடன் இயங்க வேண்டும்.
  • திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்படும்.
  • மெட்ரோ, பேருந்துகள், ஆட்டோக்களில் 50 விழுக்காடு பயணிகளுக்கு மட்டும் அனுமதி. டாக்சிகளில் 2 பேருக்கு அனுமதி.
  • திருமணம், இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மட்டும் அனுமதி.
  • ஸ்பா, உடற்பயிற்சி கூடங்களை மூட உத்தரவு.
  • வெளிநாடுகளில் இருந்து வருவோர் விடுதிகளில் தங்க வைக்கப்படுவர்.
  • வணிக வளாகங்கள், கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அரசு விதிமுறைகளுடன் செயல்படலாம்.
  • ஆன்லைன் டெலிவரிகளுக்கு அனுமதி.
  • உணவகங்கள், பார்களில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுக்கு அனுமதி.
  • அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை.

இதையும் படிங்க: இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.