புதுச்சேரி: கரோனா பரவல் காரணமாக மே 24ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் புதிய கட்டுபாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,
- தனியார் வாகனங்களை (ஆட்டோ, கார்) இயக்கும்போது ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு இடையே தடுப்புகள் அமைக்க வேண்டும்
- அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் (மருத்துவம் சார்ந்த உற்பத்திப் பொருட்கள், விவசாய பாதுகாப்பு உபகரணம்) வழக்கம்போல் செயல்படும்.
- ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கலாம்/ மற்ற தொழிற்சாலைகளை பராமரிப்பு பணிகளுக்காக திறக்கலாம்
- தொழிலாளர்கள் தங்கி பணி செய்யும் தொழிற்சாலைகள் இயக்கலாம்
- தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் ஊழியர்களுக்கு தொற்று உறுதியானால் மருத்துவ விடுமுறை அளிக்க வேண்டும்; பணி நீக்கம் செய்யக்கூடாது
- தொழிலாளருக்கு தொற்று உறுதியானதும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி தொழிற்சாலை முழுவதும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்
- ஊரடங்கின்போது தேவையின்றி சுற்றித்திரிவோருக்கு காவல் துறை, வருவாய்த்துறை மூலம் அபராதம் விதிக்கப்படும்
- அதிகரித்துவரும் கரோனா பாதிப்பு இறப்புகளை தடுக்க ஆய்வு செய்கிறோம்.