டெல்லி: கரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் அறிகுறி அல்லது கரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அவர் கூறினார். ஆகவே, சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இன்று (ஜன.1) முதல் கரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2023ஆம் ஆண்டில் அமலாகும் புதிய விதிகள்: கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!