ராணுவத்தின் புதிய துணை தலைமை தளபதியாக எம்.கே. பாண்டே நேற்று(பிப். 1) பொறுப்பேற்றுக்கொண்டார். முன்பு தலைமைத் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் சி.பி. மொஹந்தியின் பதவிக்காலம் ஜனவரி மாத இறுதியுடன் நிறைவடைந்ததை அடுத்து புதிய துணை தலைமை தளபதியாக பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
அருணாசலப் பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட கிழக்குப் பிராந்தியத்தின் தளபதியாக இருந்துவந்தவர் மனோஜ் பாண்டே. தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான, லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே டிசம்பர் 1982 ஆம் ஆண்டில் பொறியாளர் பிரிவில் - கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் (தி பாம்பே சாப்பர்ஸ்) ல் பணியில் நியமிக்கப்பட்டார்.
மனோஜ் பாண்டே தனது 39 ஆண்டுகால ராணுவ பணியில், மேற்குப் பகுதி தாக்குதல் படையின் பொறியாளர் பிரிவின் தலைமைப் பொறுப்பு, ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் காலாட்படை பிரிவு, மேற்கு லடாக்கின் மிக உயரமான பகுதியில் உள்ள மலைப்படைப் பிரிவு, வடகிழக்கில் இராணுவ வீரர், அந்தமான் & நிக்கோபார் இராணுவத் தளபதி (CINCAN) மற்றும் கிழக்குப் படைப்பிரிவின் தலைமை தளபதி ஜெனரல் ஆஃபீசர் கமாண்டிங்க் இன் சீஃப் ஆகியவை உட்பட பல்வேறு சூழல்களில் முக்கியமான, சவாலான தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
இதையும் படிங்க: ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமை, கல்வி நிர்வாகம் அதில் தலையிட முடியாது: நீதிமன்றத்தில் வழக்கு