ETV Bharat / bharat

கனவைத் துரத்தி தினமும் 10 கி.மீ பாய்ந்தோடும் இளைஞன்; வீடியோ வைரலாக காரணம் என்ன - இங்கே பாருங்க! - இயக்குநர் வினோத் காப்ரி

நள்ளிரவில், தன் கனவிற்காக ஓடும் இளைஞனைக் கண்டு நெகிழ்ந்த பாலிவுட் இயக்குநர், அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிந்து இருக்கிறார். அந்தக் காணொலி பெரும் வைரலாகி வருகிறது.

கனவுகளை நோக்கி ஓடும் இளைஞரின்  வைரல் வீடியோ :  சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சி

author img

By

Published : Mar 22, 2022, 7:24 PM IST

நொய்டா: கடந்த மார்ச் 20ஆம் தேதி, பாலிவுட் இயக்குநர் வினோத் காப்ரி தனது ட்விட்டரில் வெளியிட்ட காணொலி வைரலானது.

அதில் அவர், ''தனது கடமைகளையும் கனவுகளையும் சரியான அளவுகோலில் வைத்துப் பயணிக்கும் இந்த இளைஞனின் காட்சி உங்களின் முகங்களைப் புன்னகை செய்ய வைக்கும்'' என்ற வாசகத்துடன் அந்தக் காணொலியைப் பதிந்திருக்கிறார்.

  • This is PURE GOLD❤️❤️

    नोएडा की सड़क पर कल रात 12 बजे मुझे ये लड़का कंधे पर बैग टांगें बहुत तेज़ दौड़ता नज़र आया

    मैंने सोचा
    किसी परेशानी में होगा , लिफ़्ट देनी चाहिए

    बार बार लिफ़्ट का ऑफ़र किया पर इसने मना कर दिया

    वजह सुनेंगे तो आपको इस बच्चे से प्यार हो जाएगा ❤️😊 pic.twitter.com/kjBcLS5CQu

    — Vinod Kapri (@vinodkapri) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ராணுவத்தில் சேர பாடுபடும் இளைஞன்

இயக்குநர் வினோத் ராய், எதேச்சையாக காரில் செல்லும்பொழுது ஒரு இளைஞன் பையுடன் வீட்டை நோக்கி ஓடுவதைப் பார்த்துள்ளார். தன்னுடைய காரில், அந்த இளைஞனை அவர் போகும் இடத்தில் இறக்கி விடுவதாகவும் இயக்குநர் வினோத் ராய் கூறியுள்ளார். ஆனால், அந்த இளைஞர் அதை மறுத்துள்ளார். அந்த இளைஞர் மெக் டொனால்ட்ஸில் வேலை செய்பவர்.

அந்த இளைஞரின் பெயர் பிரதீப் மெஹ்ரா. இவர் உத்தரகாண்டைச் சேர்ந்தவர். இவர், தற்பொழுது நொய்டாவில் தனது சகோதரரின் வீட்டில் தங்கி வருகிறார். இவரது தாயார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ராணுவத்தில் சேர ஆசையுள்ள பிரதீப், தினமும் வேலை முடிந்து வீடு திரும்பும்போது ஓடி வந்தே தனது ஓட்டப்பயிற்சியை முடித்துக் கொள்வாராம்.

இயக்குநர் நெகிழ்ச்சி

பிரதீப்புடன் பேசிக்கொண்டே காரை இயக்கிய வினோத் காப்ரியிடம், பகலில் ஓட்டப்பயிற்சி செய்யத் தனக்கு நேரமில்லை எனக் கூறுகிறார், பிரதீப்.

இயக்குநர் வினோத் காப்ரி டிபன் வாங்கித்தருவதாகக் கூறிய போது, தன் சகோதரர் வீட்டில் தனக்காக சாப்பிடாமல் காத்திருப்பார். ஆகையால் நான் அங்கு செல்ல வேண்டும் என இயக்குநரின் வேண்டுகோளை மறுத்துள்ளார், பிரதீப்.

இதனைக் கண்டு வீடியோ எடுத்த வினோத் காப்ரி, நெகிழ்ந்து போய், அதைத் தனது சமூக வலைதளங்களில் பதிந்துள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் இந்த சிறு வயதில் இந்த இளைஞரின் கடின உழைப்பைப் பாராட்டி வருகின்றனர். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:பஞ்சாபில் நாளை பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு பொது விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.