டெல்லி : நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர கடந்த 2013-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இத்தேர்வில் வெற்றி பெற்றால் தான், மருத்துவப் படிப்புகளில் சேர முடியும். எனினும் இத்தேர்வை தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் விலக்கு கோரி வருகின்றன.
இருப்பினும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளை படிக்க அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
நீட் தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. தேர்வுக்கு விண்ணபிக்க neet.nta.nic.in என்ற இணைய முகவரிக்குள் சென்று உரிய படிவத்தை பூர்த்தி செய்து, மாணவர்கள் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.6) கடைசி நாளாகும். விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், விருப்பமுள்ள மாணவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்ப நடைமுறையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
பொதுப் பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஆயிரத்து 700 ரூபாய் மற்றும் EWS/OBC பிரிவனருக்கு ஆயிரத்து 600 ரூபாயும் SC/ST/PwD பிரிவுகளை சேர்ந்தவரகளுக்கு ஆயிரம் ரூபாயும் தேர்வுக் கட்டணமாக விதிக்கப்பட்டு உள்ளது. நடப்பு 2023 - 24 ஆண்டில் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வை எழுத தேசிய தேர்வு முகமை வழிவகை செய்து உள்ளது.
இதையும் படிங்க : பழங்குடியின இளைஞர் மது கொலை வழக்கு - 13 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை - சிறப்பு நீதிமன்றம் அதிரடி!