ETV Bharat / bharat

நீட் தேர்விற்கு நாளை முதல் ஹால் டிக்கெட் - hall ticket available from tomorrow

நீட் நுழைவுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நீட் தேர்விற்கு நாளை முதல் ஹால் டிக்கெட்

author img

By

Published : Jul 10, 2022, 12:54 PM IST

டெல்லி: மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற பட்டப்படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் ஜூலை 17 அன்று இந்தியா முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வை தமிழ், ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் எழுதலாம். இந்த தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்விற்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீட் தேர்விற்கு 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாட்டில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் நீட் தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்விற்கு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நீட் முறைகேடுகளை தவிர்க்க வழிமுறைகள் என்ன? - சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.