குஜராத்: அரபிக்கடலில் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இந்தியக் கடற்படையுடன் இணைந்து அரபிக் கடலில் சோதனை நடத்தியது.
இந்தச் சோதனையில் 800 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

இவற்றின் சந்தை மதிப்பு 2,000 கோடி ரூபாய் என இந்தியக் கடற்படை அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவில் ரூ.850 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு அழிப்பு