ஜம்மு காஷ்மீர் பந்திபோராவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அக்பர் லோன். இவரது மகன் ஹிலால் லோன், தேசிய மாநாட்டு கட்சித் தலைவராக உள்ளார். இவர், கடந்தாண்டு ஹஜினில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் அவதூறாக பேசியதாக கூறி அவர் மீது வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தின் ஹாஜினிலுள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அவர் நேற்று (பிப்.15) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கல சிலையை கடத்திய நபர் தேனியில் கைது