ETV Bharat / bharat

கொச்சியில் இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து!

Kochi Helicopter Crash: கேரள மாநிலம் கொச்சியிலிருந்து புறப்பட்ட கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NAVY HELICOPTER ACCIDENT KOCHI
கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 4:45 PM IST

எர்ணாகுளம்: கேரள மாநிலம், கொச்சியில் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் (Chetak Helicopter) விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நிலையில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சேடக் என்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சி கடற்படை விமான தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் ஓடுபாதையில் விழுந்துள்ளதாகவும், இந்த விபத்தின்போது ஹெலிகாப்டரில் இரண்டு கடற்படை வீரர் இருந்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறா அல்லது வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதா? என விசாரணைக்குழு விசாரித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த கடற்படை வீரர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மிகப் பழமையானது என்றும் இந்த விபத்து குறித்து இந்தியக் கடற்படை சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க: உ.பி. அலிகார் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு? போலீசார் தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.