2020இல் இந்தியாவைத் தாக்கிய புயல்கள்
புயல் | காற்றின் வேகம் | மாநிலங்கள் | உயிரிழப்பு | பாதிப்புகள் |
ஆம்பன் (மே 2020) | 190 கி.மீ. | மேற்குவங்கம், ஓடிசா | 86 |
|
நிசர்கா (ஜூன் 2020) | 110 கி.மீ. | மகாராஷ்டிரா, கோவா, குஜராத் | 6 |
|
நிவர் (நவம்பர் 2020) | 120 கி.மீ. | தமிழ்நாடு | 3 |
|
புரெவி (டிசம்பர் 2020) | 80 கி.மீ. | தமிழ்நாடு, கேரளா | 9 |
|
காட்டுத்தீ:
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தில் மே மாதம் ஏற்பட்டு பல நாள்கள் நீடித்த காட்டுத் தீயால் 51 ஹெக்டேர் பரப்பளவில் பாதிப்பு ஏற்பட்டது. 1 லட்சம் மரங்கள் தீயில் கருகியதோடு இரண்டு பேர் உயிரிழந்தனர். பலர் தீக்காயமுற்றனர்.
வெட்டுக்கிளி படையெடுப்பு
- 2019, 2020ஆம் ஆண்டுக்கு இடையில், இந்தியா ஒரு மோசமான வெட்டுக்கிளித் தாக்குதலைச் சந்தித்தது.
- ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசத்தில் இந்த வெட்டுக்கிளி தாக்குதல்கள் இருந்தன.
- ஈரான், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் படையெடுத்த இந்த வெட்டுக்கிளிகள் குஜராத்தின் பனஸ்காந்தா மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் தனது தாக்குதலைத் தொடர்ந்தது.
- மே மாதத்தில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பெரும்பாலான விளைநிலம் இந்த வெட்டுக்கிளித் தாக்குதலுக்கு உள்ளாகின.
- ஜுன் மாதத்தில், டெல்லி என்சிஆர், குருகிராம் பகுதிக்குள் வெட்டுக்கிளிகள் வந்தது மணல்புயல் போல் தோற்றமளித்தது.
மத்திய அரசின் சேத அறிக்கை
- 2019-20இல் ராஜஸ்தான் மாநிலத்தில், வெட்டுக்கிளி தாக்குதலால் எட்டு மாவட்டங்களில் 1,79,584 ஏக்கர் விளைநிலம் பாழாகின.
- குஜராத் மாநிலத்தில் இரண்டு மாவட்டங்களில் விளைநிலத்தின் சேதம் 19,313 ஹெக்டேர் என மதிப்பிடப்பட்டது.
- 2020-21 காலப்பகுதியில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பிகார், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய 10 மாநிலங்களில் வெட்டுக்கிளி ஊடுருவல்கள் பதிவாகியுள்ளன. குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப், பிகார் மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் பயிர் இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தன.
வெள்ளம் பாதிப்புக்குள்ளான மாநிலங்கள் விவரங்கள்
அஸ்ஸாம்
- 5.69 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
- 30 மாவட்டங்களிலுள்ள 5,378 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
- 113 பேர் உயிரிழந்தனர்.
- 10,063 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
- 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலம் பாழாகியது.
- காசிரங்கா தேசிய பூங்காவில், 14 காண்டாமிருகங்கள் உள்பட 137-க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்தன.
பிகார்
- 16 மாவட்டங்களைச் சேர்ந்த 80,36,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
- 550,792 பேர் வெள்ள பாதிப்பு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
உத்தரப் பிரதேசம்
- 1,090 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
- மாநிலத்தின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 15 மாவட்டங்களில் வழக்கமான அளவைவிட 20 விழுக்காடு அதிகமான மழை பொழிந்தது.
- 38,248 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் நிலம் நீரில் மூழ்கியது.
- அசாம்கர், மவு, கோண்டா மாவட்டங்களில் மூன்று அணைகள் சேதமடைந்தன.
கேரளா
- ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவில் அதிகமான அளவு மழை பொழிந்தது. இதனால், 22 பேர் உயிரிழந்தனர்.
- 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்ததாக அம்மாநில அரசு மதிப்பிட்டது.
ஹைதராபாத் (தெலங்கானா)
- அக்டோபர் 18ஆம் தேதி பெய்த கனமழையால் ஹைதராபாத் வெள்ளத்தில் மூழ்கியது.
- அக்டோபர் 18ஆம் தேதி 11 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.
- 70 பேர் இந்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
- வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 3 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர்.
- சுமார் 3,400 வீடுகள் சேதமடைந்தன.
- 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டது.
நிலச்சரிவு:
கேரளா
- இடுக்கி மாவட்டம் மூணாறு பெட்டி முடி எஸ்டேட் பகுதியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 52 பேர் உயிரிழந்தனர். 19 பேருக்கு என்ன நேர்ந்தது என்ற தகவல் இல்லை.