ETV Bharat / bharat

விழா மேடையில் சேலையில் பற்றிய தீ.. நூலிழையில் உயிர் தப்பிய சரத்பவார் மகள்...

கராத்தே தொடக்க விழாவில் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது சேலையில் நெருப்பு பற்றி மராட்டிய எம்.பி. சுப்ரியா சுலே நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சரத்பவார் மகள்
சரத்பவார் மகள்
author img

By

Published : Jan 15, 2023, 8:53 PM IST

நூலிழையில் உயிர் தப்பிய சரத்பவார் மகள்

புனே: மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சியின் என்.பி. சுப்ரியா சுலே. பாரமதி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே.

ஹின்ஜவாதி பகுதியில் நடைபெற்ற காராத்தே போட்டியின் தொடக்க விழாவில் சுப்ரியா சுலே கலந்து கொண்டார். விழா மேடையில் வைக்கப்பட்டு இருந்த சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலைக்கு சுப்ரியா சுலே மாலை அணிவித்தார்.

அப்போது திடீரென அவர் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றிக் கொண்டது. மேடையில் இருந்த விளக்கில் அவரது சேலை உரசி தீப்பற்றிக் கொண்டது. அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து அவருக்கு தெரிவித்த நிலையில், துரித நடவடிக்கையால் தீ மேற்கொண்டு பரவாமல் அணைக்கபப்ட்டது.

சேலையில் தீப்பற்றியது குறித்து சட்டென அறிந்து தீயை அணைத்ததால், நூலிழையில் சுப்ரியா சுலே உயிர் தப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

சம்பவம் குறித்து சுப்ரியா சுலே வெளியிட்டுள்ள அறிக்கையில், கராத்தே போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது எதிர்பாராத விதமாக எனது சேலையில் தீப்பற்றிக் கொண்டது. சரியான நேரத்தில் தீயை அணைக்கப்பட்டது. நான் பாதுகாப்பாக இருப்பதால் கட்சித் தொண்டர்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள், மற்றும் தலைவர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Nepal plane crash: 5 இந்தியர்கள் உள்பட 72 பேர் விமான விபத்தில் பலி எனத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.