பெங்களூரு (கர்நாடகா): பெங்களூருவில் நிறுவப்பட்டுள்ள தொழில் நுட்பம் மற்றும் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான போஷ் இந்தியாவின் புதிய 'ஸ்மார்ட்' வளாகத்தை பிரதமர் மோடி இன்று (ஜூன் 30) காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அதன்பின் பேசிய பிரதமர், "இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இந்தியாவின் ஸ்டார்ட்-அப் அமைப்புகள் உலகிலேயே பெரியதாக உள்ளது. தொழில் நுட்பத்துறையில் பல வேலைவாய்ப்புகள் உள்ளன.
டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்"என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிவேக இன்டர்நெட் வழங்குவதை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது" என்றார். மேலும் அவர், போஷ் நிறுவனம் இந்தியாவில் 100 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிர முதலமைச்சராகிறார் ஏக்நாத் ஷிண்டே: இன்று மாலை பதவியேற்பு!