ETV Bharat / bharat

நடிகர் நானா படேகர் வைரல் வீடியோ விவகாரம் - விளக்கமளித்து மன்னிப்பு! - nana patekar apologises after video goes viral

Nana Patekar Apologised: செல்ஃபி எடுக்க வந்த சிறுவனை நடிகர் நானா படேகர் தலையில் அடித்த வீடியோ வைரலான நிலையில், அவர் இது குறித்து விளக்கமளித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

விளக்கமளித்து மன்னிப்பு
செல்பி எடுக்க வந்த ரசிகரை தலையில் அடித்த நடிகர் நானா படேகர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 12:00 PM IST

வாரணாசி: தன்னுடன் செல்பி எடுக்க வந்த நபரை பாலிவுட் நடிகர் நானா படேகர் அடித்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அவர் இதுகுறித்து விளக்கமளித்து, மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் முன்னணி நடிகரான நானா படேகர், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்து அனைவருக்கும் அறிமுகமானவர். 3 தேசிய விருதுகளைப் பெற்றுள்ள இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம், ‘தி வேக்கின் வார்’.

  • Slap-Kalesh b/w Nana patekar and his fan over that guy wanted to take sfie with Nana without his permission in Varanasi pic.twitter.com/ZBtIRolnUj

    — Ghar Ke Kalesh (@gharkekalesh) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தற்போது நடிகர் அனில் ஷர்மாவுடன் இணைந்து வாரணாசியில் ‘ஜர்னி’ என்ற படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் இவருடன் செல்ஃபி எடுக்க வந்த சிறுவனை, நானா படேகர் தலையில் அடித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை முரட்டுத்தனமான நபர் என வசைபாடினர்.

இதையும் படிங்க: “பழங்குடியினர் சமூகத்தினரை பாம்பு பிடிப்பவர்களாக பார்த்து புறக்கணிக்கிறோம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்நிலையில், அவர் தற்போது இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் கூறியிருப்பது, “சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த வீடியோ எங்கள் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி. அதற்காக நாங்கள் ஒரு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தோம். பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக ஒத்திகை பார்த்தோம்.

  • #WATCH | On a viral showing him slapping a boy for taking a selfie with him, actor Nana Patekar says, "A video is going viral where I have hit a boy. Though this sequence is a part of our film, we had one rehearsal...We were scheduled to have a second rehearsal. The director told… pic.twitter.com/CVgCainRg1

    — ANI (@ANI) November 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அப்போது, அந்த சிறுவன் உள்ளே வந்தபோது இயக்குநர் என்னை துவங்கச் சொன்னார். அந்தச் சிறுவனை எனக்கு தெரியாது, அவர் எங்கள் குழுவில் ஒருவர் என நினைத்தேன். அதனால்தான் நான் அவரை காட்சியின்படி அறைந்தேன். பின் அவரை வெளியேற்றச் சொன்னேன். அதன் பிறகுதான் அவர் படக்குழுவில் இல்லை என்பதை அறிந்தேன்.

எனவே, நான் அவரை மீண்டும் அழைக்கப் போனேன். ஆனால் அவர் ஓடிவிட்டார். அவரது நண்பர் இந்த வீடியோவை படம் பிடித்திருக்கலாம். நான் யாரிடமும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கூறியதில்லை. நான் இதை செய்யவில்லை. இது தவறுதலாக நடந்தது. ஏதேனும் தவறான புரிதல் இருந்தால், மன்னித்து விடுங்கள். நான் இப்படி எதுவும் செய்ய மாட்டேன்" என விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க: மம்முட்டியின் மருமகனுக்கு ஜோடியாகும் சாக்‌ஷி அகர்வால்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.